ஐதராபாத்:

தெலங்கானா பள்ளி கல்வி துறை அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள், மாணவ மாணவிகளுக்கு பரிட்சாத்திர முறையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. இரு தரப்பின் வருகையும் உறுதிப்படுத்தப்படுகிறது. அதோடு அரசு நலத்திட்டங்கள் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பும் குறைகிறது.

தெலங்கானாவில் கிடைத்துள்ள இந்த வெற்றியை பார்த்து, இந்த ஏஃஎப்ஆர் என்ற தொழில்நுட்பத்தை டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. விரைவில் டெல்லி கல்வி துறை அதிகாரிகள் குழு தெலங்கானாவில் உள்ள பள்ளிகளை பார்வையிடவுள்ளது.

தெலங்கானாவில் ஆயிரம் பள்ளிகளில் இந்த பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை அமல்படுத்தப்பட் டுள்ளது. இதர பள்ளிகளிலும் அடுத்த 2 மாதத்தில் அமல்படுத்தப்படவுள்ளது. இதற்காக மாநில அரசு கடந்த ஆண்டு ரூ. 4.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. எனினும் நடைமுறை சிக்கல் மற்றும் மாவட்டங்களின் மறு சீரமைப்பு காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது.

வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முழுமையாக அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்த திட்டம் செயல்பட தொடங்கியது. இதன் வெற்றிக்கு பிறகு ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் வருகை பதிவேடு மேலும் 7 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் அமல்ப டுத்தப்படவுள்ளது.

மாதிரி பள்ளிகள், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் இதர அரசு பள்ளிகளிலும் பல கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது. மேலும், தெலங்கானாவில் 137 அரசு அலுவலகங்கள் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பணியாளர்கள் குறித்த நேரத்திற்கு வருவது அதிகரித்துள்ளது என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறை மூலம் சம்மந்தப்பட்ட மாணவர் பள்ளியில்ன் வகுப்பறை வாசலில் பொறுத்தப்பட்டுள்ள கேமரா முன்பு முக அங்கிகாரத்திற்காக நிற்க வேண்டும். இதன் பின் தானியங்கி முறையில் வருகை நேரத்துடன் பதிவாகிவிடும். கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ள சர்வர் மூலம் வருகை பதிவேடு உயர் அதிகாரிகள் பார்வைக்கு செல்லும்.

இதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை, நேரத்தை அதிகாரிகள் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் போலி வருகை பதிவுகள், மதிய உணவு திட்டம் போன்றவற்றில் முறைகேடு நடப்பது தடுக்கப்பட்டுள்ளது.