ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி!

துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை சேர்த்துள்ளது.

டெல்லி அணியின் துவக்க வீரர் பிரித்விஷா ஆர்ச்சர் பந்தில் டக் அவுட் ஆக, கேப்டன் ஷ்ரேயாஸ் மற்றும் ஷிகர் தவான் அரைசதங்கள் அடித்தனர்.

ஷிகர் தவான் 33 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 57 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 43 பந்தில் 2 சிக்ஸர்கள் & 3 பவுண்டரிகளுடன் 53 ரன்களையும் அடித்தனர்.

வேறு பேட்ஸ்மென்கள் யாரும் குறிப்பிடத்தக்க இன்னிங்ஸ் ஆடவில்லை. ரஹானே 9 பந்துகளில் 2 ரன்களை அடித்து அவுட்டானார்.

முடிவில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்தது அந்த அணி.

ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களை வீசி, 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜெய்தேவ் 2 விக்கெட் கைப்பற்றினார்.