163 ரன்களை எடுத்து முதலிடத்திற்கு முன்னேறுமா மும்பை அணி?

அபுதாபி: மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

துவக்க வீரர் பிரித்விஷா 4 ரன்களுக்கு அவுட்டாக, மற்றொரு துவக்க வீரராக ஷிகர் தவான் கடைசிவரை களத்தில் நின்றார். ஆனால், அவரால் பெரிய ஸ்ட்ரைக்கை கொடுக்க முடியவில்லை. 52 பந்துகளை சந்தித்து 69 ரன்களை மட்டுமே அடித்தார். இதில் 1 சிக்ஸர் & 6 பவுண்டரிகள் அடக்கம்.

ரஹானே வெறும் 15 ரன்களில் அவுட்டானார். கேப்டன் ஷ்ரேயாஸ் 33 பந்துகளில் 43 ரன்கள் மட்டுமே அடித்தார். இறுதியில், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே சேர்த்தது டெல்லி அணி.

மும்பை அணி சார்பில், ஜேம்ஸ் பேட்டிசன் 3 ஓவர்கள் மட்டுமே வீசி அதிகபட்சமாக 37 ரன்களை கொடுத்தார். பும்ரா விக்கெட் எடுக்கவில்லை என்றாலும், 4 ஓவர்களில் 26 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

You may have missed