ஷிகர் தவான் மீண்டும் சதம் – பஞ்சாபிற்கு எதிராக 164 ரன்களை அடித்த டெல்லி..!

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களின் முடிவில் 164 ரன்களை எடுத்துள்ளது. இன்றையப் போட்டியிலும் ஷிகர் தவான் சதமடித்தார்.

துவக்க வீரர் பிரித்விஷா வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 61 பந்துகளை சந்தித்து 106 ரன்களை அடித்தார். அதில் 3 சிக்ஸர்கள் & 12 பவுண்டரிகள் அடக்கம்.

கேப்டன் ஷ்ரேயாஸ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 14 ரன்களை மட்டுமே அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது டெல்லி அணி.

இன்றையப் போட்டியில் ஷிகர் தவான் மட்டும் ஆடவில்லை என்றால், டெல்லி அணியின் நிலைமை பரிதாபம்தான்!