ஐதராபாத் அணிக்கு 190 ரன்களை இலக்கு நிர்ணயித்த டெல்லி அணி!

அபுதாபி: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 189 ரன்களை அடித்துள்ளது.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

டெல்லி அணியின் துவக்க வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், 27 பந்துகளில் 38 ரன்களை அடித்தார். ஷிகர் தவான் 50 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 78 ரன்களை வெளுத்தார்.

கேப்டன் ஷ்ரேயாஸ் 20 பந்துகளில் 21 ரன்களை அடிக்க, ஹெட்மேயர் 22 பந்துகளில் 42 ரன்களை விளாச, டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களைக் குவித்தது.

ஐதராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர், 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்து 50 ரன்களை விட்டுக்கொடுத்தார்.