டில்லி: ராணுவ வீரர்கள் பாசறை திரும்பினர்

--

டில்லி:

குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்கும் முப்படை வீரர்களும் 29-ம் தேதி பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கும்.

இன்று பாசறை திரும்பும் நிகழ்ச்சி இன்னிசையுடன் நடந்தது. டில்லி விஜய் சவுக் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதிகள், மத்திய அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.