ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11ந்தேதி வரை நீட்டிப்பு! டெல்லி சிறப்பு நீதிமன்றம்

டெல்லி:

என்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிக்கி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11ந்தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிதம்பரம் மீதான அமலாக்கத்துறை விசாரணை காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்  ஆஜர்படுத்தப்பட்டார்.  அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து,  ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டது. இதன் காரணமாக சிதம்பரம் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் திகார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

ஏற்கனவே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சிதம்பரம் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.