டெல்லி: புத்தாண்டு தினத்தன்று டெல்லியில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.

1.1 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை குறைந்துள்ளது. இந்தக் குளிர்காலத்தில் இதுவே குறைந்தபட்சமாக பதிவாகி உள்ள வெப்பநிலை என்று வானிலை ஆய்வு மைய  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளில் மிக குறைவானது என்றும் 2006ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 0.2 டிகிரி செல்சியஸ் பதிவானதாகவும் கூறி உள்ளனர்.

1935ம் ஆண்டு ஜனவரியில் பதிவான மைனஸ் 0.6 டிகிரி செல்சியஸ் மிகவும் குறைவான வெப்பநிலை ஆகும். குறைவான வெப்பநிலை எதிரொலியாக, டெல்லியில் கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.