ஜாதிப்பெயரை வாகனங்களில் எழுதி டெல்லி நகர சாலையில் உலா வந்த 600 பேருக்கு தண்டனை…

 

டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில், வாகனங்களில், தங்கள் பெயரோடு, ஜாதியின் பெயரையும் எழுதி வண்டி ஓட்டுவது புதிய கலாச்சாரமாக பரவி உள்ளது.

சிலர் நம்பர் பிளேட்டுகளிலும், வண்டி எண்ணுடன் சேர்த்து ஜாதி பெயர் ‘ஸ்டிக்கரை’ ஒட்டி, கம்பீரமாக உலா வருகின்றனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கவுதம புத்தர் நகர் காவல்துறை ஆணையாளர் அலோக் சிங் உத்தரவிட்டார்.

இதனால் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் போலீசார் நேற்று அதிரடியாக, ஜாதி பெயர் பொறித்த ‘ஸ்டிக்கர்’ ஒட்டி கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தோரை மடக்கி பிடித்தனர்,
ஜாதிப்பெயர் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை அவர்கள் கிழித்து எறிந்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக குற்றம் சாட்டி அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும், ‘ஜாதிப்பெயருடன்’ சாலையில் திரிந்த சுமார் 600 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

– பா. பாரதி

You may have missed