டில்லி

டில்லி பல்கலைக்கழக கணிதத்துறை பி எச் டி படிப்புக்கு சேர தாழ்த்தப்ப்ட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான குறைந்த பட்ச மதிப்பெண் பூஜ்ஜியம் என கணிதத்துறை அறிவித்துள்ளது

டில்லி பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பி எச்டி படிப்புக்கான நேர்க்காணல் மற்றும் குறைந்தபட்ச மதிப்பெண்ணை  அறிவித்துளது.  இதில் குறைந்த பட்ச தேவையான மதிப்பெண்ணாக இடஒதுக்கீடு இல்லாத மாணவர்களுக்கு 94% எனவும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 84% எனவும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 0% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தம் 223 பேருக்கான நேர்க்காணல் வரும் ஆகஸ்ட் 4 வரை நடைபெற உள்ளது.  இதில் 32 பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டு பட்டியலில் உள்ளனர்.