நண்பர்களின் தேவைக்காக வழிப்பறியில் ஈடுபட்ட மாணவர்

டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தனது நண்பர்களின் செலவிற்காக வழிபறியில் ஈடுபட்டுள்ளார். திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மாணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

student

டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஷால்(24) என்ற மாணவர் துக்லகாபாத் கிராமத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதற்கு பணம் தேவைப்பட்டதால் வழிப்பறி செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

துக்லகாபாத் பகுதியில் ஒரு புகைப்படக்காரர் மலர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த விஷால் அந்த நபரை தாக்கி விட்டு கேமராவை எடுத்து சென்றார். இது குறித்து தகவலறிந்த போலீசார் விஷாலை துரத்தி சென்று பிடித்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “ டெல்லி பல்கலைக்கழகத்தில் விஷால் பிஏ படித்திருக்கிறார், அவர் தனது குடும்பத்துடன் துக்லகாபாத்தில் தங்கி உள்ளார். விஷால் வழிப்பறியில் ஈடுபட்டதாக கோவிந்தபுரி, குல்தீப் சிங் உள்ளிட்டோர் புகார் அளித்துள்ளனர். விஷால் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஒருவரை தாக்கி விட்டு அவரது கேமராவை பறித்து சென்றார். அவரிடம் இருந்து திருடி சென்ற காமரா கைப்பற்றப்பட்டது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட விஷாலின் நண்பர்களை தேடி வருகிறோம். இதற்கு முன்பு அவர் மீது ஒரு சில குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன “ என்று தெரிவித்தனர்.

You may have missed