டெல்லி: டெல்லி வன்முறை நாட்டின் தேசிய கறை என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். அதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

போராட்டத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இந்த வழக்கில் யாருக்கும் எந்தவித பாகுபாடும் காட்டக்கூடாது.

தேவைப்பட்டால் தண்டனை வழங்குவதற்கான சட்டமும் மாற்றப்பட வேண்டும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் தாமதிக்கக்கூடாது. டெல்லியில் நடந்த சீக்கிய எதிர்ப்பு வன்முறையில் நீதி தாமதமானது போன்று இந்த வழக்குகளில் நடக்கக்கூடாது என்றார்.

இதே கருத்தை அவரது மகனும், லோக் ஜன்சக்தி தலைவருமான சிராக் பாஸ்வான் வலியுறுத்தி உள்ளார். வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.