டெல்லி வன்முறை: துப்பாக்கி குண்டுகளால் காயம்… கிரிமினல்களிடம் ஆயுதங்கள்… போலீஸ் தகவல்

டெல்லி:

டகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் காயமடைந்துள்ளதாகவும், அந்த பகுதியில் உள்ள கிரிமினல்களிடம் ஆயுதங்கள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது.  வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகளும் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர் ரத்தன் லால் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், 5 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி 82 பேர் துப்பாக்கி குண்டுகளால் காயம் அடைந்துள்ளனர்.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உட்பட சுமார் 250 பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை போலீசார் இதுவரை தயாரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவருக்கு துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டதாக அந்த எண்ணிக்கை தெரிவிக்கிறது. போராட்டக்காரர்களுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்து என்பது குறித்து போலீசார் விராரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், சம்பவ இடத்தில் இருந்து 350 க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி .32 mm, மற்றும் .9mm .315 mm காலிப்பர் மற்றும் சில பயன்படுத்தப்பட்ட கேட்டர்ஜ்களையும் கண்டு பிடித்துள்ளோம் என்றார்.

முதற்கட்ட போலீஸ் விசாரணையில், டெல்லியில் உள்ள சின்ன சின்ன கிரிமினல்கள், நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை கையிருப்பு வைத்திருந்ததாகவும், அவற்றை “வேலையற்ற இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் கொடுத்து வன்முறையில் ஈடுபட தூண்டியதும் தெரிய வந்துள்ளது. சோதனையின்போது, கத்திகளின் கைபிடிகள், பெட்ரோல் ஏறி குண்டுகள் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.

கொள்ளை, பிக்பாக்கெட்டிங் போன்ற குற்றச்சாட்டுகளில் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட உள்ளூர் குற்றவாளிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்குவதிலும் விநியோகிப்பதிலும் ஈடுபட்டனர் என்பதைக் காட்ட போதுமான தொழில்நுட்ப ஆதாரங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதுமட்டுமின்றி அந்த கிரிமினல்களில் வீடுகளிலும் பிற இடங்களிலும் சோதனை நடத்தி போலீசார் வருகின்றனர்.

You may have missed