டெல்லி வன்முறையில் உயிரிழந்த உளவுத்துறை அதிகாரியின் உடலில் 200 கத்திக்குத்து…..

டெல்லி:

டெல்லியில் நடைபெற்ற இரு தரப்பினருக்கான வன்முறையின்போது, உயிரிழந்த டெல்லி காவல்துறையைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரியின் உடலில் 200 கத்திக்குத்துக்கள் இருந்தது, உடற்கூறாய்வு சோதனையில் தெரிய வந்ததுள்ளது. இது காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பார்களுக்கும் இடையே கடந்த ஞாயிறு மாலை முதல் நடைபெற்ற மோதல், திங்கட்கிழமை யன்று மாபெரும் வன்முறையாக மாறியது. காவல்துறை உயர் அதிகாரிகள், அமெரிக்க அதிபர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், வன்முறை கைமீறிச் சென்றது.

இதில் ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். பலி எண்ணிக்கை இதுவரை 39ஆக உயர்ந்துள்ள நிலையில், காவல்துறையைச் சேர்ந்த பலரும் இதில் மரணமடைந்து உள்ளனர். இதற்கிடையில்,  வன்முறையில் பஉளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மாவும் உயிரிழந்தார். அவரது  உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

இதில், அவரது உடலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக, பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். இதன்மூலம் அன்கிட் சர்மாவை வன்முறைக் கும்பல் நீண்ட நேரம் சித்ரவதை செய்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவல் அங்குள்ள காவலர்களிடையே பெரும் சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க காவல்துறையில் 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் தொடர்ந்து ரோந்து சென்றவண்ணம் உள்ளனர்.

டெல்லி சந்த்பாக் பகுதியைச் சேர்ந்த அன்கிட் சர்மா, 2017ம் ஆண்டில் இருந்து உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். வன்முறை நடைபெற்ற செவ்வாய்க்கிழமை வெளியே சென்ற அவர் திரும்பா நிலையில், வன்முறையாளர்களை அவரை தாக்கி, சரமாரியாக கத்தியால் குத்தியும் கொன்று உடலை கால்வாயில் போட்டுள்ளனர். மறுநாள் அவரது உடல் மீட்கப்பட்டது.

You may have missed