டெல்லி: கடும் குளிரால் 4 டிகிரிக்கு கீழே சென்ற வெப்பநிலை – பொதுமக்கள் கடும் அவதி

டெல்லியில் கடும் குளிர் நிலவுவதால் வெப்பநிலை 3.7 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

delhi

வட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கடும் குளிர் நிலவி வருகிறது. அதன் காரணமாக தலைநகர் டெல்லியில் வெப்பநிலை இன்று காலை 3.7 டிகிரி செல்சியசாக இருந்து வருகிறது. போதுவாக குளிர்காலங்களில் டெல்லியில் வெப்பநிலை குறைவது வழக்கம். ஆனால், தற்போது 4 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

கடும் குளிர் நிலவி வருவதால் வானம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. அடர் பணி காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் அவதிக்குள்ளாகின்றன. டெல்லி வாழ் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வீட்டிற்குள்ளே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.