டில்லி: “உறவு”க்கு வர மறுத்த சிறுவனுக்கு “அங்கே” சூடுபோட்ட பெண்மணி

திருமணமான பெண்மணி ஒருவர், பாலியல் உறவுக்கு வர மறுத்த சிறுவனுக்கு, ஆணுறுப்பில் சூடு போட்ட சம்பவம் டில்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியை அடுத்த நொய்டா அருகே உள்ளது சப்ரவுலா என்கிற கிராம். இங்கு வசிக்கும் திருமணமான ஒரு பெண்மணி, தன்னுடன் உறவுக்கு வரும்படி பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை வற்புறுத்தி இருக்கிறார். அந்த சிறுவன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து ஆத்திரமான அந்த பெண்மணி, சிறுவனின் ஆணுறுப்பில் கம்பியால் சூடு வைத்துவிட்டார்.

அந்த சிறுவன் அழுதுகொண்டே தன் வீட்டுக்குச் செல்ல.. அவனது தாய் விசயம் அறிந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரில் பக்கத்துவீட்டுப் பெண்மணி தொடர்ந்து தனது மகனுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த பெண் தற்போது  தலைமறைவாகிவிட்டார்.  இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த காவலர்கள் அந்த பெண் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.