டில்லி: இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

டில்லி:

லைநகர் டில்லியில் இளம்பெண் ஒருவருக்கு மதுகொடுத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுமார் 30 வயத மதிப்புடைய அந்த பெண்ணின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி 5 பேர் கொண்ட கும்பலால் அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார், பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் பிபிஓவில் பணியாற்றும் இளைஞர்கள் என தெரியவந்துளளது.

நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர்  தெற்கு டில்லி முனிர்கா பகுதியில்  இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.  அவரது ஆண்நண்பர் பெய்ர விகாஸ். சம்பவத்தன்று, டில்லி பாண்டவ் நகர் பகுதியில் தனது நண்பரின் பார்ட்டி ஒன்றுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார்.

போகும் வழியிலேயே அவருடன் அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் பார்ட்டி நடைபெற்ற மற்றொரு நண்பரின் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு ஏற்கனவே 3 பேர் இருந்தனர். இந்நிலையில் பார்ட்டி ஆரம்பமானதும்,  விகாஸ் அந்த பெண்ணை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு, தனக்கு வேலை இருப்பதாகவும், சற்று நேரத்தில் திரும்பி வந்து அழைத்துச்செல்வதாகவும் கூறி, அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதைத்தொடர்ந்து பார்டியில் கலந்துகொண்ட 5 நண்பர்களும் சேர்ந்த அந்த பெண்ணின் வாயில் மதுவை ஊற்றி கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து யாரிடம் கூறினாரோ,  கூச்சலிட்டாலோ அல்லது இங்கிருந்து தப்ப முயன்றாலோ கொன்றுவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த நாள் அதிகாலை 5.30 மணியளவில் அவர்களிடம் தப்பித்து முயற்சித்து, மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதன் காரணமாக அவரது காலில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரை பலாத்காரம் செய்த, லக்ஷயா,விகாஸ் குமார், நவீன், ஸ்வரித், ப்ரதீக் உள்ளிட்ட 5 பேரையும் ர் கைது செய்தனர்.

விசாரணையில் பலாத்காரத்தில் ஈடுபட்ட அந்த பேரும், டில்லியில் ஒரு பிபிஓ நிறுவனத்தில் பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது.