சென்னை : கொரோனா வைரசில் இருந்து மீண்ட டெல்லி வாலிபர்

சென்னை :

 

டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்த 20 வயது வாலிபருக்கு கடந்த புதன் அன்று நடத்திய சோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, கடந்த இருதினங்களாக எடுக்கப்பட்ட சோதனையில், கொரோனா வைரஸ் இல்லை என்பது சிகிச்சைக்கு பின் உறுதியாகி உள்ளது.

அவரை இன்னும் இரு தினங்களில் வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறது தமிழக சுகாதார துறை.

இந்த தகவலை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து வந்த இந்த இளைஞர் தமிழகத்தில் கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட இரண்டாவது நபர் என்பதும், அவர் தற்பொழுது குணமடைந்து வீடு திரும்ப இருப்பது திருப்தியளிக்கும் விதமாக உள்ளது.