டில்லி,

லைநகர் டில்லியில் உள்ள வனவிலக்கு சரணாலயத்தில் உள்ள சிம்பன்சி தனது 58வது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடியது.

டில்லியில் உள்ள வனவிலங்கு சரணாலயமான மிருககாட்சி சாலையில் மிகவும் பழமையான மனிதக்குரங்கு (சிம்பன்சி) வாழ்ந்து வருகிறது. அதன் பிறந்தநாளை மிருக காட்சி சாலை நிர்வாகம் வெகு விமரிசையாக தடபுடலாக கொண்டாடியது.

பழகுவதற்கு இனிமையாகவும், தோழமையாகவும் உள்ள  இந்த சிம்பன்சியின் பெயர் ‘ரிட்டா’.  மிகவும் பழமையான இந்த மனித குரங்கின் 58வது  பிறந்தநாளை  டில்லி மிருக காட்சி சாலை ஊழியர்கள்  வெகு விமரிசையாக கேக் வெட்டி கொண்டாடினர்.

இதுகுறித்து பூங்கா இயக்குனரான ரெனுசிங் கூறியதாவது,

தற்போது 57 வயதாகும் ரிட்டா மிகவும் பழமையான மனித குரங்கு. ஆம்ஸ்டர்டாமில் பிறந்த  இந்த சிம்பன்சி 1960ம் வருடம்,  தனது 4 வயதில் டில்லி மிருக காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது என்பதை  நினைவு கூர்ந்தார்.

மிருககாட்சி சாலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுடன் நட்புடன் பழகும் இந்த சிம்பன்சியில் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்தோம். அதன்படி அதற்கான பிறந்தநாள் கேக் ஆடர் கொடுத்து வரவழைக்கப்பட்டது.

ரிட்டாவின் பிறந்த நாளன்று, அதன் முன்னிலையில்  கேக் வெட்டி கொண்டாடியதாகவும், கேக்கின் ஒரு பெரிய துண்டை, தான் ரிட்டாவின் வாயில் ஊட்டியதாகவும் பெருமையுடன் கூறினார்.

மேலும் ரீட்டாவின் பிறந்தநாளை யொட்டி பள்ளிக் குழந்தைகள் கலந்துகொள்ளும் விதத்தில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறிய அவர், பிறந்த நாள் பரிசாக ரிட்டாவுக்கு புதிய போர்வை,  மென்மையான  கால்பந்து மற்றும் பொம்மைகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், ரீட்டாவின்  பிறந்த நாள் டீரிட்டாக, அதுக்கு பிடித்தமான வைல்டு அனிமல்ஸ் பற்றிய விசேஷ வீடியோக்கள் காண்பிக்கப்பட இருப்பதாக கூறியவர், ரீட்டாவுக்கு படம் பார்ப்பது மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார்.

இந்த திரைப்படங்களை ரிட்டா பார்க்கும் அதே நேரத்தில்,  பள்ளிக்குழந்தைகள், செய்தியாளர்கள், பார்வையாளர்கள்  காணும் வகையில் மிருககாட்சி சாலைக்கு வெளியே பெரிய ஸ்கீரின் வைக்கப்படுவதாகவும் கூறி உள்ளார்.

இந்த சிம்பன்சியான ரீட்டா தனது வாழ்நாளில் பெரும்பகுதியை டில்லியிலேயே கழித்துள்ளதாகவும், ஆனால், இடையில்  1985 முதல் 2006 வரை, இனப்பெருக்கத்திற்காக அதை பஞ்சாப் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பியதாகவும் கூறினார்.

மேலும் ஒரு சிம்பன்சியின் ஆயுட்காலம் 40 ஆண்டுகள்தான்… ஆனால், ரிட்டாவோ 57 ஆண்டு களை கடந்து வாழ்ந்து வருகிறது. இதற்கு காரணம் அது  மிருககாட்சி சாலையில் பாதுகாப்பாக வாழ்ந்து வருவதுதான். அதன் காரணமாக அதன் ஆயுட்காலம் நீடித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.