தீபாவளி பட்டாசு வெடிப்பால் புகை மண்டலமான டில்லி

--

டில்லி

க்கள் உச்சநீதிமன்றம் அனுமதித்த நேரத்தையும் மீறி பட்டாசு வெடித்ததால் டில்லி நகரம் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு படுவதாகக் கூறி அதை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஒட்டி உச்சநீதிமன்றம் தீபாவளி நேரத்தில் இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியது.

டில்லி நகரில் தீபாவளியை இரவு 8 மணி முதல் 10 மணி வ்ரை மட்டுமே பட்டாசு வெடிக்க் அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் பசுமைப் பட்டாசு தவிர மற்ற பட்டாசுகளை விற்பனை செய்யவும் வியாபாரிகளுக்குதடை விதிக்கப்பட்டிருந்தது. இது குறித்து டில்லி போலீசார் தீவிரமாக கண்காணிக்க உத்தராவிடப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்ற் உத்தரவு நாடெங்கும் கடும் எதிர்ப்பை உண்டாக்கியது. இதனால் மக்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி பட்டாசு வெடித்தனர். டில்லியில் பெரும்பாலான இடங்களில் இரவு 8 மணிக்கு முன்பிருந்தும் இரவு 10 மணிக்குப் பிறகும் மக்கள் பட்டாசு வெடித்தனர்.

இந்த பட்டாசுப் புகையால் டில்லி நகரமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தீபாவளிக்குப் பின் டில்லியில் காற்று மாசு அளவு 805 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் மாசு அளவு 900, 999 எனவும் பதிவாகி இருந்துள்ள்தாக கூறப்படுகிறது. இது மிகவும் அபாயகரமான மாசு அளவு ஆகும்.

அத்துடன் ஓரிரு இடங்களில் பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தகவ்ல்கள் வந்துள்ளன. டில்லி தீயணைப்புத் துறைக்கு இத்தகைய தீ விபத்துகள் குறித்து 200 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன.