டில்லி:

நாடு முழுவதும் கோடை வெப்பம் வறுத்தெடுத்து வரும் நிலையில், டில்லியில் வரலாறு காணாத அளவு வெப்பம் நீடித்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் டில்லி பாலம் விமான நிலையத்தில், வெயிலின் அளவு 40டிகிடிரியை தாண்டி, உச்சபட்சமாக 45.3° செல்சியஸ் அளவுக்கு பதிவாகி இருப்பதாகவும், இது 49ஆண்டு களுக்கு பிறகு தற்போது நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலைமைய துணை இயக்குனர் பி.பி. யாதவ், டில்லியில் கடந்த மாதம் (ஏப்ரல்) வெப்பநிலை 37.7 டிகிரி ஆக இருந்தது.  இது கடந்த ஆண்டை வட  1.4 டிகிரி அதிகம் என்று தெரிவித்தவர்,  மார்ச் 22-ல் ஹோலிக்குப் பிறகு வெப்பநிலை வேகமாக உயர்ந்தது என்று தெரிவித்துள்ளார்.

இதற்க காரணம், சமீப காலமாக  மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யவில்லை என்ப தால், வெப்பநிலை கட்டுப்படுத்த முடியாரத அளவுக்கு உயர்ந்து வருகிறது என்று கூறினார்.

தலைநகரில் உள்ள பாலம்  விமான நிலையத்தில் கடந்த செவ்வாயன்று  அதிகபட்சமாக 45.3 ° செல்சியஸ் வெப்பநிலையை பதிவானதாக தெரிவித்தவர்,  ஏப்ரல் மாதத்தில் இதுபோன்ற கடுமையான வெப்பம்  ஐந்து தசாப்தங்களுக்கு பிறகு தற்போது உருவாகி உள்ளது என்று தெரிவித்தார். அதுபோல  சஃபார்ஜூங்கில் 43.7 ° C ஆக வெப்பநிலை இருந்தது என்றும் தெரிவித்து உள்ளார்.

பொதுவாக ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை அதிகரிக்கும் என்றவர், கடந்த பத்தாண்டு களில்  45 டிகிரியை தாண்டியது இல்லை என்று கூறியவர், கடந்த 2017ம் ஆண்டு   ஏப்ரல் மாதத்தில் இது 44.9 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்தது, ஆனால், இந்த ஆண்டு அதையும் மீறி 45.3° செல்சியஸ் பதிவாகி உள்ளது என்று தெரிவித்தார்.