ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு இடைக்கால ஜாமின்

டில்லி:

முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் மீதான ஐஆர்டிசி குத்தகை முறைகேடு தொடர்பான வழக்கில், அவருக்கு டில்லி பாட்டியாலா நீதி மன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

லாலு பிரசாத் யாதவ்

பீகார் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்,  கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரயில்வே அமைச்ச ராக இருந்தபோது, ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரித்து வந்த சிபிஐ, அமலாக்கத்துறை  சார்பில் லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐஆர்சிடிசி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகையை பாட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதால், முன்ஜாமின் கோரி லாலு குடும்பத்தினர் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் ஏற்கனவே லாலு மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு மீதான இன்று நடை பெற்றது. தற்போது லாலு உடல் நலம்பாதிக்கப்பட்டு ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால்,  வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தப் பட்டார்.

அதைத்தொடர்ந்து, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: interim bail to Lalu, IRCTC SCAM, Lalu Prasad Yadav, Patiala House Court, ஐஆர்சிடிசி முறைகேடு, முன்ஜாமின், லாலு பிரசாத் யாதவ்
-=-