வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்: பொன்மாணிக்க வேல் பதிலடி

சென்னை:

காவலர்களை நான் மிரட்டுவதாக வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்க வேல் தெரிவித்து உள்ளார்.

பொன்.மாணிக்க வேல்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் உள்ள  மயில் சிலை மாற்றப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்து வந்த அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று  சிலை தடுப்பு பிரிவில் உள்ள சில காவல்துறை அதிகாரிகள், பொன் மாணிக்க வேலுக்கு எதிராக காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.

அவர் கொடுத்துள்ள புகார் மனுவில், சட்டத்திற்கு முரணாக வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை செய்ய சொல்லி பொன் மாணிக்க வேல் தங்களை வற்புறுத்துவ தாகவும்,  தங்களுக்கு பணி இடமாறுதல் வேண்டும் என்று 13 காவல் அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரைத்தொடர்ந்து, சில மணி நேரத்தில், டிஜிபி அலுவலகத்தில் இருந்து செய்தி குறிப்பு வெளியானது. அதில்,  பொன்மாணிக்கவேல் தங்களை சட்டத்திற்கு முர ணாக வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை செய்ய வற்புறுத்துவதால் தங்க ளுக்கு பணி இடமாறுதல் வேண்டும் என்று 13 காவல் அதிகாரிகள் புகார் மனு அளித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சிலை கடத்தல் மற்றும் மாற்றப்பட்டது தொடர்பான வழக்குகளில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பொன் மாணிக்க வேல்மீதே புகார் கூறப்பட்டிருப்பது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொன்.மாணிக்கவேல் மீதான புகார் அளித்துள்ளது குறித்து சமூக வலைதளங் களில் பரபரப்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முக்கிய புள்ளிகளுக்கு ஆதரவாக அரசின் மறைமுக நடவடிக்கை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நேற்று  பொன்மாணிக்க வேலுக்கு எதிராக  சிலைகடத்தல் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோ, காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி உள்பட13 காவல் அதிகாரிகளும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் சென்றதும் குறிப்பிடத்தக்கது.