காவிரி மேலாண்மை வாரியம்: டெல்டா மாவட்ட விவசாயிகள் சென்னையில் உண்ணாவிரத போராட்டம்!

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  டெல்டா மாவட்ட விவசாயிகள் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அரசியல் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் சென்னை சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

உச்சநீதி மன்ற தீர்ப்புபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை  வாரியத்தை உடனே  அமைக்க வலியுறுத்தியும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த நுற்றுக்கணக்கான  விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.