Random image

டெல்டா சிறப்பு வேளாண் மண்டலம்: தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேறியது

சென்னை:

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசு அதற்கான மசோதாவை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது.

விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அதன்படி,  இன்று சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய எடப்பாடி, தமிழக அரசு வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது என்றும், ஒரு விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். ஒரு மனதாக சட்ட முன்வடிவை நிறைவேற்றித்தர வேண்டும் என அனைத்து கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

அதைத்தொடர்ந்து மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், இந்த  சட்டம் தொடர்பாக பல்வேறு கேள்வி எழுப்பினார். இந்த சட்டத்தின்படி, நடைமுறை யில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய முடியுமா?,வேளாண் மண்டலங்களில் திருச்சி, கரூர், அரியலூர் விடுபட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் பதில் அளித்தார். தொடர்ந்து நடைபெற்ற . விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது.