வட கர்நாடகா: முதல்வர் குமாரசாமியின் புத்திசாலித்தனத்தால் போராட்டம் வலுவிழந்தது

பெங்களூரு:

ர்நாடகாவில் சமீப காலமாக வடகர்நாடகா என்ற தனி மாநில கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த முக்கிய அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து குமாரசாமி பேசி, சமாதானப்படுத்தி இருப்பதால், வடகர்நாடக கோரிக்கை வலுவிழந்து உள்ளது.

அதே சமயத்தில் வடகர்நாடகா தனி மாநில கோரிக்கையை  அரசு ஆதரிக்காது என்றும் மாநில முதல்வர் குமாரசாமி திட்டவட்டமாக கூறி உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வட பகுதிகளான உத்தர கர்நாடகாவை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க  தொடங்கி உள்ளது.  இதை வலியுறுத்தி நாளை (2ந்தேதி) போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

தென் கர்நாடகா வளமாக இருக்கிறது என்றும், வட கர்நாடக கடும் வறட்சியால் பாதிக்கபட்டு உள்ளது. எங்களை அரசுகள் கவனத்தில்கொள்ளவில்லை என்று அந்த பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

வட கர்நாடகாவை சேர்ந்த மாவட்டங்களின் தொழில்வளர்ச்சிக்கு மாநில அரசுகள் முன்னுரிமை வழங்குவதில்லை.  எனவே வட கர்நாடக சேர்ந்த 13 மாவட்டங்களை ஒன்றாக இணைத்து தனி மாநில அந்தஸ்து கேட்கிறோம். அதற்காக வரும் ஆகஸ்டு 2ஆம் தேதி வட கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என தனி மாநில அமைப்பின் தலைவர் சோமசேகர் கொடாம்பரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அந்த பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்து மாநில முதல்வர் குமாரசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது,  அவர்களின் கோரிக்கை குறித்து கேட்டறிந்த முதல்வர் குமாரசாமி,  அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளுவதாக உறுதியளித்தார். அந்த பகுதிகளை சேர்ந்த  13 மாவட்டங்களை பார்வையிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, தற்போது கர்நாடகாவில் மக்கள் அரசுக்கு ஆதரவாக தான் இருக்கிறார்கள். அரசு அனைவருக்கும் பொதுவாக தான் செயல்படுகிறது. அனைத்து தரப்பினரும் பயன்பெரும் வகையில் தான் திட்டங்கள் தீட்டப்படுகிறது

“மாநிலத்தை பிரிக்க பிஜேபி சதி செய்கிறது என்று குற்றம் சாட்டினார் தனி மாநில கோரிக் கைக்கு அரசு ஒருபோதும் இணங்காது என்ற முதல்வர்,  பாஜகவினர் இந்த விவகாரத்தில் எங்களை குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், அந்த பகுதி மக்களின் வாங்குவங்கியை கைப்பறவே பாஜக இந்த நாடகத்தை அரங்கேற்ற உள்ளது. இது சம்பந்தமான  கோரிக்கைக்கு எந்தவித ஆதரவும் இல்லை “என்று கூறினார்.

மேலும், வடக்கு கர்நாடகாவில் உள்ள பல முக்கிய அரசாங்க அலுவலகங்களை பெங்களூருக்கு  மாற்றுவதற்கும் மக்கள் மனக்குறைகளை தீர்க்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

குமாரசாமியின் புத்திசாலித்தனமான சமரச முயற்சிகள் காரணமாக  வடக்கு கர்நாடக மாநில கோரிக்கை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், பாஜகவின் அரசியல் நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக  மாநில காங்கிரஸ் தலைவர்  தினேஷ் குண்டூராவ், இது பாரதியஜனதாவின் திட்டமிட்ட சதி. 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை கருத்தில்கொண்டே, அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும்..இதன் காரணமாக அந்த பகுதி மக்களின் வாக்குகளை பெற திட்டமிட்டுள்ளனர். ஆனால், இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.

கர்நாடக பாஜக கட்சியின் மூத்த தலைவர் ஸ்ரீராமுலு, குமாரசாமி தலைமையிலான அரசு ஒரு பகுதியினருக்கு மட்டுமே சாதகமாக செயல்படுகிறது. இது தொடர்ந்தால், தனிமாநில கோரிக்கையை நானே ஆதரிப்பேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.