சென்னை: டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி கோரி வரும் 7ம் தேதி பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9 மாதங்களாக பார்கள் மூடப்பட்டுள்ளதால் 400 கோடி ரூபாய் வரை வாடகை பாக்கி உள்ளதாக டாஸ்மாக் பார் சங்கம் தெரிவித்துள்ளது. பார்களை திறக்க அனுமதி வழங்காததால் 7ம் தேதி அமைச்சர் தங்கமணி வீட்டை பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவல் எதிரொலியாக, மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கோவில்கள், வணிக வளாகங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் டாஸ்மாக் பார் ஆகியவை மூடப்பட்டன.

பின்னர் ஊரடங்கு தளர்வு விதிகளின்படி படிப்படியாக கோவில்கள், வணிக வளாகங்கள் போன்றவை திறக்கப்பட்டன. ஆனால், டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி தரப்படவில்லை.