மெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது.

இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 92 அழகிகள் பங்கேற்றனர்.

இறுதிச் சுற்றில் கொலம்பியா நாட்டின் லாரா ((Laura Gonzalez)), ஜமைக்காவின் டேவினா ((Davina Bennett)) மற்றும் தென்ஆப்பிரிக்காவின் டெமி லீ ((Demi-Leigh Nel-Peters)) ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் தென்ஆப்பிரிக்காவின் டெமி லீ பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு உலகம் முழுவதும் இருந்து  வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.