சென்னை,

சென்னை பல்லாவரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர்.

கடந்த வரும் மத்திய அரசு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு காரணத்தால், கடன் சுமை காரணமாக ஜவுளி வியாபாரி தனது  குடும்பத்தினரை கழுத்றுத்து கொலைசெய்துவிட்டு, தான் தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

பல்லாவரத்தை அடுத்த பம்மல் திருவள்ளுவர் நகரில் வசித்துவருபவர் தாமோதரன். அந்தப் பகுதி யில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.  இந்நிலையில், தனது வீட்டில் தாய் சரஸ்வதி, மனைவி தீபா மற்றும் 2 குழந்தைகளான ரோஷன் மற்றும் மீனாட்சி ஆகியோரைக் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, தாமோதரனும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், உயிரிழந்த 4 பேரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அப்போது,  உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தாமோதரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில்குரோம்பேட்டை மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உடடினயாக  சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அபாய கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது தற்கொலைக்கான காரணம் குறித்து தாமோதரன் கடிதம் எழுதி வைத்துள்ள தாக கூறப்படுகிறது.

அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளதாகவும், அதில், மோடி அரசு அறிவித்த பண மதிப்பிழப்பு காரணமாக தொழிலில் பயங்கர நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதன் வாயிலாக கடன்சுமை அதிகரித்ததால்,  தனது குடும்பத்தினரைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாக கூறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தாமோதரனின் உறவினர்களான குமரவேல், பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.