ஜனநாயக படுகொலை!: டி.டி.வி. தினகரன் ஆவேசம்

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட்டது து ஜனநாயக படுகொலை என்று டி.டி.வி. தினகரன் ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.

பணப்பட்டுவாடா புகார்கள் குவிந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவித்தது. பணப்பட்டுவாடா செய்ததில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பெரும் பங்கு உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்த ஆணையம், இது குறித்து 28 பக்க அறிக்கையை வெளியிட்டது..

இந்த நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து ட்விட்டரில் (சசிகலா அணியை சேர்ந்த) அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி தினகரன் தநது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது மாபெரும் தவறு. இது ஒரு ஜனநாயக படுகொலை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.