மோடியின் நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி குறைவு : ரகுரம் ராஜன்

வாஷிங்டன்

மோடியின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி யால் இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்ததாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணி புரிந்த பொருளாதார வல்லுனர் ரகுராம் ராஜன். இவர் ரிசர்வ் வங்க் ஆளுனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது அமெரிக்காவில் ஆசிரியப் பணி செய்து வருகிறார். உலக அளவில் புகழப்படும் பொருளாதார வல்லுனரான ரகுராம் ராஜன் வெள்ளியன்று கலிபோர்னியா பல்கலைக் கழகம் சார்பில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

ரகுராம் ராஜன், “உலக பொருளாதாரம் வளர்ச்சி அடையும் வேளயில் இந்திய பொருளாதார வளர்ச்சி வெகுவாக குறைந்தது. கடந்த 2012 முதல் 2016 வரை வேகமாக வளர்ந்து வந்த இந்திய பொருளாதார வளர்ச்சியை இரு சூறாவளிகள் தாக்கின. அவை மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமுலாக்கம் ஆகியவைகள் ஆகும்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து இந்த இரு நடவடிக்கைகளால் இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்தது. தற்போது 7% வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா போன்ற பெரிய நாடுகளீல் 7% வளர்ச்சி என்பது போதுமானது இல்லை. இந்த வளர்ச்சி ஒவ்வொரு வருடமும் 7% என்றால் மட்டுமே நல்ல வளர்ச்சி என கொள்ள முடியும்.

சென்ற வருடம் வெகுவாக குறைந்த பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது 7% வளர்ச்சி ஆகும். சென்ற வருடம் பொருளாதார வளர்ச்சி குறைவு எவ்வளவு என கணக்கிடும் போது இதை வளர்ச்சி எனவே ஒப்புக் கொள்ள முடியாது. ” என தனது உரையில் கூறி உள்ளார்.

You may have missed