லூதியானா: மத்திய அரசின் நோட்டுத்தடையால் மிதிவண்டி(Bicycle) தயாரிப்பு நிறுவனங்கள் மிகுந்த நஷ்டமடைந்ததாக கூறி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மிதிவண்டி மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (UCPMA) மத்திய அரசுக்கு எதிராக போரட்டத்தில் குதித்துள்ளது.

bicycle

“வாரத்துக்கு எங்களால் ரூ.20,000-ஐக் கூட கண்ணில் பார்ப்பதுகூட அரிதாகிவிட்டது. பணமில்லாமல் நாங்கள் எப்படி தொழில் நடத்துவது. எந்த புதிய ஆர்டகளும் வரவில்லை, வந்தாலும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கொடுக்க பணம்(Cash) இல்லை. எங்களிடம் பணி செய்த பணியாளர்கள் மீண்டும் அவரவர் சொந்த மாநிலங்களுக்கே திரும்பி விட்டாரகள். எங்கள் நடப்பு வங்கி கணக்கில் இருந்து எங்கள் சொந்த பணத்தை எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும்”என்று கொதிக்கிறார் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.சேத்.
மேலும், “ஹோண்டா நிறுவனம் கூட தனது பணியாளர்களுக்கு 15 நாட்கள் லே-ஆஃப் கொடுத்து அனுப்பிவிட்டது. எங்களுக்கு உதிரி பாகங்கள் செய்து தரும் நிறுவனங்கள் தயாரிப்பை நிறுத்திவிட்டனர். நாங்கள் மிகுந்த சிக்கலில் இருக்கிறோம். பிரதமர் மோடி எங்களுக்கு ஏதேனும் தீர்வு தர வேண்டும்” என்றும் கே.கே.சேத் தெரிவித்தார்.