பிரதமர் நரேந்திர மோடி கடந்தவருடம் அமல்படுத்திய உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிகப் பெரிய தவறு என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ரிச்சர்ட் தாலர் கருத்து தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்துறையில் 2017ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்றவர் அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் தாலர். இவர் தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்திதல் பேராசிரியராக பயணியாற்றி வருகிறார்.

இவரிடம் இந்தியாவில் பிரதமர் நரேந்தி மோடி எடுத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ஸ்வராஜ் குமார் என்ற மாணவர் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் கருத்து கேட்டிருக்கிறார்.

இதற்கு தாலர் அளித்த பதில் கடிதத்த்தில், கறுப்புப் பணத்தை ஒழிப்பது மற்றும் ரொக்கமில்லா பணபரிவர்த்தனையை ஊக்கப்டுத்துவது என்ற நோக்கத்தில் உயர் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய மத்திய அரசு தரிவித்தது. இந்த நடவடிக்கை மிகப்பெரிய தவறாகும்.

புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கவில்லை.  குழப்பத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளது” என்று தாலர் தெரிவித்துள்ளார்.