பண பதிப்பிழப்பின்போது 480% அளவிலான கள்ளநோட்டுக்கள் பரிவர்த்தனை: நிதி புலனாய்வு குழு அறிக்கை

டில்லி:

த்திய அறிவித்த பண பதிப்பிழப்பின்போது ஏராளமான கள்ளநோட்டுக்கள் பரிவர்த்தனை சந்தேகத்திற்கிடமான முறையில் நடைபெற்றுள்ளதாக நிதி புலனாய்வு பிரிவு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

கடந்த 2016-17ம் நிதி ஆண்டில்,  சாதாரண பரிவர்த்தனைகளை விட 480 சதவிகித அளவுக்கு அதிக அளவில் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் வங்கிகளின் மொத்த காலாவதியான பணத்தை மட்டும்  பெற்றது மட்டுமல்லாமல் அதிக அளவிலான கள்ளநோட்டுக்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வங்கி மற்றும் பிற பொருளாதார ஆய்வுகளின்படி  போலி நாணய பரிவர்த்தனைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016-17 ஆம் ஆண்டில் 3.22 லட்சம் சம்பவங்கள்  அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளநோட்டு சம்பந்தமான பிரிவு கடந்த 2008-2009ம் ஆண்டு தொடக்கப்பட்டதில் இருந்து, கடந்த  2015-16ம் ஆண்டில் 4.10 லட்ச ரூபாயிலிருந்து 2016-17 ம் ஆண்டில் 7.33 லட்சம் வரை சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாகவும், இதுவே இதுவரை கண்டறியப்பட்டுள்ளதில் அதிக அளவிலானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

2008-09ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட  சி.சி.ஆர். ஆய்வின்படி,  (counterfeit currency reports) கடந்த ஆண்டு நடைபெற்ற பரிவர்த்தனையே இதுவரை நடைபெற்றதில் அதிக எண்ணிக்கை  என்றும் கூறி உள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ள நிதி புலனாய்வு பிரிவு, எவ்வளவு போலி நோட்டுக்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டது  என்பது குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.