பண மதிப்பிழப்பு: நாடு முழுவதும் 18 ஆயிரம் ஏடிஎம் இயந்திரங்கள் இன்னும் செயல்படவில்லை

டில்லி:

நாட்டில் பணமதிப்பிழப்பு அமல்படுத்தி 2 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், இன்னும் 18 ஆயிரம் ஏடிஎம் இயந்திரங்கள் புதிய பணத்திற்காக தகுந்தவாறு சீரமைக்கபப்டவில்லை என்ற தகவல் ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ந்தேதி இரவு, நாட்டு மக்களின்  தலையில் பேரிடியை போட்டு தாக்கினர் பிரதமர் மோடி. உயர் மதிப்புடையே ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.   கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்றார். ஆனால், அவர் அறிவித்தபடி  கருப்புப் பணம் ஒழியாமல், பொதுமக்களே கடுமையான பாதிப்புகளை எதிர் கொண்டனர்.

அப்போது நடுத்தர மக்களும், சாமானிய மக்களும் புதிய பணம் கிடைக்காமல் வங்கி வாசல்களில் காத்திருந்து காத்திருந்து வேதனை அடைந்தனர். அன்றாட செலவுக்கே பணமில்லாமல் திண்டாடினர். பலர் பட்டினி சாவை எதிர்கொண்டனர்.  இந்த சம்பவம்  நாடு முழுவதும் மோடி மீது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை முடிந்து 21 மாதங்கள் முடிந்து விட்டது. ஆனால் இன்னும்கூட புதிய ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம் இயந்திரங்களில் வைத்து மக்களின் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த முடியாமல், நாடு முழுவதும்  18 ஆயிரத்து 135 ஏடிஎம் எந்திரங்களை எஸ்பிஐ வங்கி சீரமைக்கப்படாம்ல் இருப்பதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்து உள்ளது.

இந்த செயல்படாத ஏடிஎம் இயந்திரங்கள் பெரும்பாலும் வடமாநிலங்களிலேயே இருந்து வருகிறது.

இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா என்று கோஷம் போடும் மோடியின் அரசு, 2 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் இன்னும் ஏடிஎம் இயந்திரங்களை சரிசெய்ய முயற்சி எடுக்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.