டில்லி:

பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் ரூ. 2 லட்சம் கோடியை டெபாசிட் செய்த 22.22 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இதன் பிறகு வங்கியில் அதிகளவில் பணம் செலுத்தியவர்களை கண்காணிக்கும் பணியில் வருமான வரித் துறை ஈடுபட்டது.

இந்த காலக்கட்டத்தில் தனிநபர் மற்றும் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் 22.22 லட்சம் பேர் ரூ. 2 லட்சம் கே £டியை டொபசிட் செய்துள்ளனர். இதில் 21.12 லட்சம் பேர் தனிநபர்கள். 11 ஆயிரத்து 579 நிறுவனங்கள், அறக்கட்டளை, அசோசியேட்ஸ், பிரிவினையற்ற இந்து குடும்பம் உள்ளிட்டவைகளில் 57 ஆயிரத்து 693 கணக்குகளில் இவை செலுத்தப்பட்டது.

இவர்கள் அனைவருமே அதிகளவில் பணம் டெபாசிட் செய்தவர்கள். நாட்டில் உள்ள மூன்றில் ஒரு பங்கு தனி நபர்கள் தங்களது வருமான விபரங்களை வெளியிடவில்லை. அசோசியேட்ஸ் 47 சதவீதமும், டிரஸ்ட்கள் 24.71 சதவீதமும் வருமாவ வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை.

பணமதிப்பிழப்பு காலத்தில் முதல் 50 நாட்களில் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை டொபசிட் செய்தவர்கள் ஒரு பிரிவாக அடையாளம் காணப்பட்டனர். இரண்டாவது பரிவாக ரூ. 80 லட்சத்துக்கு மேல் என அதிகளவில் டெபாசிட் செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதில் முதல் பிரிவில் 99.40 லட்சம் பரிமாற்றம் நடந்தது. இதில் ரூ. 5.40 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டது. இரண்டாவது பிரிவில் 1.41 லட்சம் பரிமாற்றம் நடந்தது. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ரூ. 50 ஆயிரம் கோடி டெபாசிட் செய்துள்ளன. திட்டமிட்ட வங்கிகள் ரூ. 1.40 லட்சம் கோடி டொசிட் செய்துள்ளன.