தேர்தலில் கோடி கோடியாக பணம்…கேள்விகுறியான வங்கிகளின் கட்டுப்பாடு

டெல்லி:

பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு நாட்டு பொருளாதாரத்தில் உலாவி கொண்டிருந்த சட்ட விரோதமான பணத்தை உறிஞ்சி எ டுத்துவிட்டதாக மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், தற்போது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் ரூ. 200 கோடி இருப்பது உறுதிய £கியுள்ளது. இதர மாநிலங்களில் இருந்து பணம் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.


உ.பி.யில் இருந்து ரூ. 100 கோடியும், பஞ்சாப்பில் இருந்து ரூ. 50 கோடியும், இது தவிர மது, போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 18ம் தேதி உபியில் இருந்து 109.78 கோடி பணம் கிடைத்துள்ளது. உ.பி.யில் இன்னும் நான்கு கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. கடந்த 2012ம் ஆண்வு தேர்தலை விட தற்போது உ.பி.யில் மூன்று மடங்கு பணம் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2012ம் ஆண்டு தேர்தலில் ரூ. 11.51 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது ரூ.58.02 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ. 13.36 கோடி மதிப்பிலான 12.43 லட்சம் லிட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் ரூ. 2.59 கோடி மதிப்பிலான மதுபாட்டில்களும், ரூ. 18.26 கோடி மதிப்பிலான போதை பெ £ருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உத்ரகாண்டில் ரூ. 3.38 கோடி ரொக்கமும், ரூ. 3.10 கோடி மதிப்பிலான 1 லட்சம் லிட்டர் மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. 2012ல் ரூ. 1.30 கோடி மட்டுமே ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவாவில் ரூ. 2.24 கோடி ரொக்கமும், ரூ.1.07 கோடி மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட் ரொக்கம் 2012ம் ஆண்டை ஒப்பிடும் போது 273 சதவீதம் அதிகமாக உள்ளது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட பொது மக்களிடம் இருந்த கூடுதல் பணம், பணமதிப்பிழப்பு அறிவிப்பு மூலம் வங்கிகளு க்கு திரும்ப பெறப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் வங்கிகளில் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் கைகளில் பண புழக்கம் இல்லாத சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கிவிட்டது.

‘‘தேர்தல் களத்தில் கோடி கணக்கில் பணம் புழக்கம் இருக்கிறது. பணமதிப்பிழப்பு அறிவிப்பு மூலம் தேர்தலில் பணம் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவில்லை’’ என்று முன்னாள் தேர்தல் கமிஷனர் ஒருவர் தெரிவித்தார்.
வங்கிகள், ஏ.டி.எம்.களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை அடிப்படையாக கொண்டு பார்த்தால் தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் வேட்பாளர்கள் அவதிப்பட்டிருக்க வேண்டும்.

அதே சமயம் தேர்தல் கமிஷனின் விதிப்படி மட்டுமே செலவு செய்திருக்க வேண்டும். ஆனால், அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதன் மூலம் வங்கிகளில் பணம் எடுக்கும் கட்டுப்பாட்டு முறையில் ஓட்டை இருப்பது தெளிவாகிறது. அதை அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.