தமிழகத்தில் பரவி வரும் டெங்கு, பன்றி காய்ச்சல்: 250க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை:

மிழகம் முழுவதும்  டெங்கு பன்றி காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், சுமார் 250க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிலர் காய்ச்சக்கு பலியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 சிறுவர்கள் நேற்று பலியான நிலையில், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி பீதி ஏற்படுத்தி வரும் நிலையில், பன்றி காய்ச்சல் ஒருபுரம் பரவி மக்களை மிரட்டி வருகிறது.  சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், மதுரை, நெல்லை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள், பெரியவர்கள் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்கள். சில மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் காரணமாகவும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஒரே நேரத்தில் இரண்டு விதமான காய்ச்சல் பரவி வருவதால் மக்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

டெங்கு  கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் பணியில் சுகாதாரத்துறையும் மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.‘கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள  அரசு  மருத்துவமனையில்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு நடத்திய ரத்த பரிசோதனையில் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட விவசாய கூலி தொழிலாளி ஒருவர் பலியானதாகவும் கூறப்படுகிறது..கடலூர் அருகே உள்ள  வன்னியர் புரம் கிராமத்தில் ராஜா என்ற விவசாயக் கூலித் தொழிலாளி கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காய்ச்சல் குணமாகாததால், மேல்சிகிச்சைக்காக  புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்ததாககூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பீதி. அரசு மருத்துவமனையில் குவியும் நோயாளிகளின் கூட்டம் உள் நோயாளிகளாக மட்டும் 70 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்/

எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 47 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், டெங்கு பாதிக்கப்பட்ட 31 குழந்தைகள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை இயக்குனர் அரசர் சீராளர் தெரிவித்தார்.

சென்னை  அரசு மருத்துவமனையில்  காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோருக்கு 50 படுக்கை வசதியுடன் 2 வார்டு தயாராக இருப்பதாகவும், டெங்குவினால் பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், நர்சுகள் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இன்று வரை 53 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 27 பேர் பெரியவர்கள், 26 பேர் குழந்தைகள் ஆவர். இதுதவிர 5 பேருக்கு டெங்கு ‘பாசிட்டிவ்’ இருப்பதால் அவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை டீன் டாக்டர் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வார்டில் 100 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் டீன் பொன்னம்பல நமச்சிவாயம் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,  நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது; அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது என்று கூறினார்.

காய்ச்சல் வந்தால் உடனடியாக பொதுமக்கள் அரசு மருத்துவமனையை அணுக  வேண்டுகோள் விடுத்த அமைச்சர், நோய் தடுப்பு நடவடிக்கைக்காக சென்னையில் 82 நடமாடும் மருத்துவ குழுக்கள் களமிறங்கி உள்ளன  என்றும் கூறினார்.

மேலும், கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் இடங்களை வைத்திருப்போர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்த அமைச்சர்,  பன்றிக் காய்ச்சல் பருவ கால நோய், அதுகுறித்து மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Dengue and swine flu fever spreading in Tamilnadu : More than 250 people were hospitalized, தமிழகத்தில் பரவி வரும் டெங்கு, பன்றி காய்ச்சல்: 250க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
-=-