புதுச்சேரி,

புதுச்சேரியில்  டெங்கு விழிப்புணர்வு நடைபயணம் கவர்னர் கிரண்பேடி தலைமையில் நடை பெற்றது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சுமார் 2 மணி நேரம் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சமீப காலமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் காரணமாக தினசரி பலர் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு சரியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தானே  தானே களத்தில் இறங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாகவும் அறிவித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து  டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த 5 கி.மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

இதன்படி இன்று காலை 6.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து விழிப்புணர்வு நடைபயணத்தை கவர்னர்  நடைபயணத்தை கிரண்பேடி தொடங்கினார். அவருடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள், குடியிருப்போர் நல சங்கத்தினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நடை பயணம் சென்றனர்.

இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின்போது,   கவர்னர் கிரண்பேடி தனது கையில் ஏடீஸ் கொசுவின் படம் போட்ட பதாதையை  பிடித்து வந்தார்.  நடைபயணத்தை பார்க்க திரண்ட மக்களிடம், டெங்கு கொசுவை ஒழிப்பது குறித்தும்,  வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி வற்புறுத்தினார்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம்,‘ கவர்னர் மாளிகையில் தொடங்கி  கடற்கரை சாலை, குருசு குப்பம், சோலை நகர், பெருமாள் கோவில் வீதி, டி.வி. நகர், மி‌ஷன் வீதி வழியாக மீண்டும்  கவர்னர் மாளிகையை அடைந்தது.