டெங்கை பரப்புவது அமெரிக்க சார்பு நிறுவனமா?: சித்த மருத்துவரின் திடுக் தகவல்

சென்னை:

ன்றைக்கு மக்களுக்கு உயிர்பயத்தை ஏற்படுத்தியிருக்கும் டெங்கு காய்ச்சலை இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனம்தான் பரப்புகிறது என்று அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை கூறுகிறார் சித்தமருத்துவரான கா.திருத்தணிகாசலம். மேலும், சித்தவைத்தியத்தில் டெங்கு நோய்க்கு மருந்து இருப்பதாகவும் அதன் ஃபார்முலாவை தமிழக அரசுக்கு இலவசகமாக அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு பகுதியில் சித்த மருத்துவ நிலையம் வைத்திருப்பவர் சித்தவைத்தியர் கா.திருத்தணிகாசலம். டெங்கு நோய் பரவுவது குறித்து இவர் தெரிவித்துள்ளதாவது:

“தற்போது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்நோய் பலரை பலிவாங்கிக்கொண்டிருப்பதையும் ஊடகங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள்.

இந்த நோய் ஏதோ புதிதாக வந்திருப்பதாக பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகான காலகட்டத்திலேயே இந்த நோய் பல நாடுகளில் பலரை பலிவாங்கியிருக்கிறது. இப்போதும் உலகம் முழுதும் பரவலாக வருடம் முழுதும் பத்தாயிரம் பேர் இந்நோயினால் மரணமடைகிறார்கள்.

டெங்கு கிருமி

தற்போது தமிழக அரசு மீது பல்வேறு குறைகளை கூறினாலும், கொஞ்சம் வெளிப்படையான அரசாங்கமாக இருக்கிறது.  இதனால்தான் இத்தனை பேர் இறந்த தகவல் வெளியில் வருகிறது.

இல்லாவிட்டால் ஆளுங்கட்சி மர்மக்காய்ச்சல் என்று சொல்ல.. , எதிர்க்கட்சிகள் ஏதேனும் ஒரு நோயின் பெயரைச் சொல்ல… “ இல்லை இல்லை.. அந்த நோய் கிடையாது பீதியைக் கிளப்பும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று ஆளுங்கட்சி மிரட்டும். இதையடுத்து “மர்மக்காய்ச்சல்” என்ற சொற்றொடரே அனைவராலும் பயன்படுத்தப்படும் நிலை ஏற்படும்..

சரி.. அதை விடுவோம்..

டெங்கு என்ற நோய் பல வருடங்களாக இருந்து வருகிறது என்றாலும், இந்த வருடம் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வந்து இத்தனை வீரியத்துடன் தாக்கி வருவது ஏன்?

இந்த கேள்விக்கு விடை காணும் முன்பு, டெங்கு தாக்குதலால் அதிகம் பேர் மரணமடைந்த பகுதி எது என என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஊடக செய்திகளின் அடிப்படையில் பார்த்தால், பூந்தமல்லி, திருவேற்காடு என திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமாக பலி ஏற்பட்டிருப்பதை தெரிந்துகொள்ளமுடிகிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்த இறக்குமதி ஆகும் ஆப்பிள், ஆரஞ்ச் போன்றவைகளை வைக்கும் குடோன்கள் இந்த பகுதிகளில்தான் இருக்கின்றன. இந்த பழங்கள் பேக் செய்யப்பட்டு வரும்.  பேக்கிங்,  வைக்கோல்  போன்ற மெட்டீரியலில் இருக்கும். இவற்றில்தான் டெங்குவை உற்பத்தி செய்யும் கொசுக்களை உருவாக்கும் லார்வா முட்டைகள் வைத்து அனுப்பப்படுகின்றன.

ஆப்பிள் ஆரஞ்ச் போன்ற பழங்களை இறக்குமதி செய்யும்போது, பழங்கள் தரமாக இருக்கின்றனவா, அவற்றை அனுப்பிய நிறுவனங்கள் எவை என்றுதான் அதிகாரிகள் பார்ப்பார்கள்.

பழங்கள் எந்த மெட்டீரியலில் பேக் செய்யப்பட்டிருக்கிறது.. அதில் ஏதும் லார்வா போன்ற ஆபத்துக்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய மாட்டார்கள்.

இங்கே பேக்கிங்கை பிரித்த பிறகு, அதன் மெட்டீரியலை தூக்கி வீசிவிடுவோம். அவை மழையிலோ தண்ணீரிலோ படும்போது  மூலமாக லார்வா பெருகி புழுக்களாக உற்பத்தயாகி மக்களிடம் பரவும்.

ஆம்…

டெங்கிலிருந்து நிவாரணம் பெற பல நாடுகளில் தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இன்னும் அதைப் பயன்படுத்தத் துவங்கவில்லை.

அந்த தடுப்பூசியை உற்பத்தி செய்வது அமெரிக்காவின் சார்பு நிறுவனம். இது மகராஷ்டிராவின் பூனே பகுதியில் செயல்படுகிறது. இந்தியாவில் மிகப்பெரும் செல்வாக்கு உள்ளவர்கள் அல்லது அவர்களது ஆதரவு பெற்றவர்களுக்கு வேண்டிய நிறுவனம் இது.

சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

அவர்கள், வருடத்துக்கு ஒரு தடுப்பூசியை மக்களுக்கு போட்டுவிட வேண்டும் என்று திட்டம் வைத்திருக்கிறார்கள்.

சென்ற வருடம் ரூபல்லா தடுப்பூசி போட்டார்கள். இந்த வருடம் ரோட்டோ வைரஸ் போடுறாங்க. அடுத்த வருடம் எந்த ஊசி போடுவது என்றும் யோசித்துவைத்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது.

தற்போதைய டெங்கு பீதியைப் பார்க்கும் போது இந்த சம்பங்களுக்கும் அந்த தடுப்பூசி நிறுவனத்தின் திட்டங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.

ஏற்கெனவே ரூபல்லா தடுப்பூசி குறித்தும் நமக்கு ஐயம் இருக்கிறது.

இந்தியாவில் கிட்டதட்ட 140 கோடி மக்கள் இருக்கிறார்கள். ரூபல்லா தடுப்பூசி ஒன்று ஆயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு போட்டார்கள். மொத்தம் எல்லோருக்கும் போட்டால் இரண்டு லட்சம் கோடி ரூபாய் ஆகிறது.

இந்த தடுப்பூசி நிறுவனத்துக்கு இத்தனை லட்சம் கோடி ரூபாயை உடனடியாக கொடுத்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால்தான் முதல்கட்டமாக சில மாநிலங்களுக்கு போடுகிறோம். அடுத்தகட்டமாக… உ.பியில் குழந்தைகள் இறந்துவிட்டன.. அங்கு போடுகிறோம் என்று பகுதி பகுதியாக போடுகிறார்கள்.

ஆகவே வருடத்துக்கு 25 ஆயிரம் கோடி என்று அந்த நிறுவனத்துக்கு வருமானம்.

இதே போன்று டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பதற்காக புதிய தடுப்பூசி விரைவில்வரும் என்று தோன்றுகிறது” என்று அதிர்ச்சிகரமான தகவல்களை சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

மேலும், “சித்தவைத்தியத்திலேயே டெங்கு நோயை முழுமையாக போக்க வழி உண்டு. அதற்கான பார்முலாவை அரசுக்கு இலவசமாக அளிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் பேசிய வீடியோ:

[embedyt] https://www.youtube.com/watch?v=mKjHf0WibMo[/embedyt]

Leave a Reply

Your email address will not be published.