சென்னை:

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், பல நிறுவனங்கள்  அபராதம் செலுத்த மறுப்பதாக சென்னை மாநகராட்சி புகார் கூறி உள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. சென்னை முதல் குமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தினசரி டெங்கு மரணமும் நிகழ்ந்து வருகிறது.

டெங்கு கொசுவை கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னை மாநகராட்சி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. சென்னை மற்றும் அதைச்சுற்றியுள்ள  கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், 387 பொது மருத்துவ மனைகள், 652 தனியார் மருத்துவமனைகள், 1736 அரசு கட்டிடங்கள், அலுவலகங்கள், 25,334 காலி இடங்கள்,  55520 மூடப்பட்ட வீடுகள் உள்பட ஏராளமான இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து தினசரி பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோடம்பாக்கம் மண்டலத்தில், கட்டுமான நிறுவனத்தின்  கட்டிட வளாகத்தில் தேங்கி நிற்கும் நீர் மற்றும் கொசு வளர்ப்பு இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு  ரூ .1 லட்சம் முதல் ரூ .5 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளனர்.

ஆனால், அந்த  “நிறுவனம் அபராதம் செலுத்த மறுத்துவிட்டது” என்று சென்னை மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அநத நிறுவனம், அபராதம் செலுத்தாவிட்டால், கட்டுமானத்தின் கீழ் உள்ள கட்டிடங்களுக்கு  சீல் வைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கூறிய மாநகராட்சி ஆணையர், அந்த கட்டுமானத்தின் கீழ் உள்ள ஏராளமான கட்டிடங்கள் உள்ளன.  பல இடங்களில் டெங்கு கொசு இருப்பது கண்டறியப்பட்டுஉள்ளது. இதன் காரணமாக அந்த இடத்தில் பணியாற்றி வரம் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ள அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், டெங்கு கொசு ஏடிஸ் எகிப்திக்கு 100 மீ -300 மீ பறக்கும் வரம்பைக் கொண்டுள்ளது என்று கூறினார்.

ஏற்கனவே ஐசிப் நிறுவனத்துக்கு  ரூ .1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், நகரின் தெற்கு பகுதியில், மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வழக்கமான பரிசோதனையின் போது சுகாதார அதிகாரிகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்ததை அடுத்து ரூ .1 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆனால், அவர்கள் அபராதம் செலுத்த மறுத்து வருகின்றனர். “நாங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம், மேலும் அவர்கள் இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடத்தையும் சுட்டிக் காட்டியுள்ளோம்”  இருந்தாலும் சில நிறுவனங்கள் அபராதம் விதிக்க மறுத்து வருகிறது. அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.