45 பேர் பாதிப்பு: மதுரையில் தீவிரமாக பரவும் டெங்கு….

மதுரை : மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு  இதுவரை 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழைபொழிந்து வருகிறது. இதனால் குளம் குட்டைகள் நிரம்பியதுடன், சாலைகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகி, பொதுமக்களிடையே நோய்களை பரப்பி வருகிறது. இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் டெங்கு கொசுவால் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது.
பொதுவாகவே அக்டோபர் மாதம் முதல்  கொசுவால் பரவும் நோய்கள் அதிகரித்து காணப்படும் நிலையில், மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது.  கடந்த மாதம் 14 பேர் டெக்கு கொசுவால் பாதிக்கப்பட்ட நிலையில், நடப்பு மாதம் (டிசம்பர்) இதுவரை  மேலும் 31 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் இதுவரை 45 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதையடுத்து  டெங்கு பாதிப்பு பகுதிகளில், டெங்கு கொசு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதிப்பு குறைவு என தெரிவித்துள்ளனர்.  மேலும், கொசுவை ஒழிக்க, கொசு புகை மருந்து அடிக்கும் பணி நடக்கிறது. சுற்றுப்புறங்களில் நன்னீர் தேங்காமல் மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்  அறிவுறுத்தி வருகின்றனர்.