இஸ்ரேல் ஜூடோ வீரர் தேசிய கொடி ஏந்தி வர அபுதாபியில் அனுமதி மறுப்பு!!

அபுதாபி:

அபுதாபியில் நடந்த போட்டியில் பதக்கம் வென்ற இஸ்ரேல் ஜூடோ வீரர் தனது நாட்டின் தேசிய கொடியை ஏந்தி வரவும், தேசிய கீதம் பாடவும் அனுமதி மறுக்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரான அபுதாபியில் ஜூடோ கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடந்தது. இதில் 66 கிலோ எடை பிரிவில் 25 வயதாகும் இஸ்ரேல் வீரர் தால் ஃபிலிக்கர் பதக்கம் வென்றார்.

அவர் பதக்கம் பெற மேடைக்கு வந்த போது, போட்டி அமைப்பாளர்கள் அவரை இஸ்ரேல் தேசிய கொடியை எடுத்து வர அனுமதி மறுத்துவிட்டனர். அதோடு, இஸ்ரேல் தேசிய கீதத்துக்கும் மறுப்பு தெரிவித்தனர். இதனால் பதக்கத்தை பெற்ற ஃபிலிக்கர் அமைதியாக தனது நாட்டு தேசிய கீதத்தை பாடினார்.

இந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இஸ்ரேலிய யூத சமூகம் மீது பாகுபாடு காண்பிக்கும் நாடு ஐக்கிய அரசு எமிரேட்சாகும். எனினும் விளையாட்டு போட்டியில் இதை கடை பிடித்ததற்கு பலரும் அந்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.