டென்மார்க் பேட்மின்டன் – காலிறுதிக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த்!

கோபன்ஹேகன்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார் இந்தியாவின் ஸ்ரீகாந்த்.

கொரோனா முடக்கத்திற்கு பிறகு, டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடர் நடக்கிறது.

இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், கனடா நாட்டின் ஜேசன் ஆண்டனியை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-15, 21-14 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றார் ஸ்ரீகாந்த்.

ஆனால், மற்றொரு போட்டியில், இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க்கின் கிறிஸ்டியனை எதிர்த்து விளையாடி தோல்விகண்டு வெளியேறினார்.