டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு தகுதி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

badminton

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இந்தோனேஷியாவின் கிரேகோரியாவை எதிர்கொண்டார்.

போட்டியின் முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சாய்னா 21-11, 21-12 என நேர்செட்களில் இந்தோனேசியாவின் வீராங்கனையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இதேபோல் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 16-21, 12-21 என்ற புள்ளிகளில் மோசமான தோல்வியைத் தழுவினார்.

இதன் மூலம் இந்த தொடரிலிருந்து ஸ்ரீகாந்த் வெளியேறுகிறார். ஜப்பானின் மோமோடாவை எதிர்த்து 12வது முறையாக களமிறங்கியுள்ள ஸ்ரீகாந்த் 9 முறை தோல்வியைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 3 முறை மட்டுமே வென்றுள்ளார்.

கார்ட்டூன் கேலரி