டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய சாய்னா

ஓடென்ஸ்:

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

ஜப்பான் வீராங்கனை அகேனே யமாகுச்சியை 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில்  வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க் நாட்டிலுள்ள ஓடென்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாவது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவின் சாய்னா நேவால்,ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகெனே யாமாஹூச்சியை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், சாய்னா நேவால் 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனையை வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இது காலிறுதிச் சுற்றாகும்.