டென்மார்க் ஓபன் டென்னிஸில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வி!

கோபன்ஹேகன்: டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் நடைபெற்றுவரும் டென்மார்க் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்தியவின் ஸ்ரீகாந்த் தோற்று வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் ஸ்ரீகாந்த். அவர் கோப்பை வெல்வார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இந்நிலையில் காலிறுதிப் போட்டியில் சீனதைபேயின் டியன் சென் சோவுடன் மோதினார் ஸ்ரீகாந்த். ஆனால், இப்போட்டியில் 22-20, 13-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.