டென்மார்க்:

ஸ்லாமிய பெண்கள் புர்கா அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று டென்மார்க் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய பெண்கள் உடல்முழுவதையும் மறைக்கும் விதத்திலான புர்கா உடை அணி தடைவித்துள்ளன. தற்போது இந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க்கும் சேர்ந்துள்ளது.

இதுகுறித்து டென்மார்க் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், பொது இடங்களில் முகங்களை முழுவதுமாக மறைக்கும் புர்கா அல்லது கண்களை மட்டும் வெளிக்காட்டும் நிக்வாப் ஆகிய ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தீர்மானம் குறித்து நடைபெற்ற வாக்கெடுப்பில், வெற்றிபெற்றதை தொடர்ந்து, சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை மீறும் பெண்களுக்கு 1000 க்ரோனர் (இந்திய மதிப்பில் ரூ.8200) அபராதம் விதிக்கப்படும் என்றும், அதே தவறை மீண்டும் செய்தால், அபராத தொகை 10மடங்கு அதிகரித்து 10ஆயிரம் க்ரோனர் ஆக உயர்த்தப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்ட திருத்தம் ஆகஸ்டு 1ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க் அரசின் இந்த புதிய சட்ட திருத்தம் காரணமாக அங்கு வசித்து வரும் இஸ்லாமியர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.