சென்னை:

மே மாதம் 24 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவிருந்த, 2019 ஆம் ஆண்டுக்கான துறைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு ஊழியர்களுக்காக துறைத் தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தி வருகிறது. மே மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.

தேர்வுகளின் முடிவுகள் குறைந்தபட்சம் ஓரிரு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு விடும். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் (www.tnpsc.gov.in)வெளியிடப்பட்டு பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த விவரங்கள் தேர்வாணையத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படும்.

தற்போது தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், இந்த மாதம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த துறைத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ் அறிவித்து உள்ளது.

அரசுப் பணியாளர்களுக்கான இந்த மாதம் (மே) 24 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவிருந்த துறை தேர்வுகள் ஜூன் 8 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 33 தேர்வு மையங்களில் தேர்வு  நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரகள் ஜூன் 3 முதல் முதல் 15 வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.