பயன்பாட்டிலிருந்த டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை குறைந்ததேன்?

பெங்களூரு: புழக்கத்திலுள்ள டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து, அதன் பயன்பாடும் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; 2018ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, டெபிட் கார்டுகளை வைத்திருந்தோர் எண்ணிக்கை சுமார் 100 கோடி பேர். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கையில் 15% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி 84.3 கோடி டெபிட் கார்டுகளே இப்போது புழக்கத்தில் உள்ளன. ‘மேக்னடிக் ஸ்ட்ரிப்’ எனப்படும் பழைய முறையிலான அட்டைகளை மாற்றி, ‘சிப்’ எனப்படும் கணிப்பொறி வில்லை அடிப்படையாகக் கொண்ட கிரெடிட் கார்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமென ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுதான் கிரெடிட் கார்டுகளின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். புதிய வசதிகள் கொண்ட அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க பல வங்கிகள் முன்வராத காரணத்தால், அவற்றில் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.